FOSSEE – மென்பொருள் சார்ந்த நவீன பாடங்கள் இலவச பயிற்சி பெற மாணவர்கள் மே 5 வரை விண்ணப்பிக்கலாம்

மென்பொருள் சார்ந்த நவீன பாடங்களைக்கற்பிக்கும் வித மாக இலவச பயிற்சிதிட்டத்தைமத்திய கல்வி அமைச்சகம் தொடங்கி உள்ளது .


இந்தப் பயிற்சியைப் பெற விரும் புவோர் மே 5 – ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் .


தகவல் தொழில்நுட்பத் துறை யில் நாளுக்கு நாள் புதிய மென் பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது .


அதனை உருவாக்கக் கணினி மொழி அவசியமாகும் .

 

அதன்படி , நவீன கணினி மொழி தொடர்பா கப் பயிற்சி வழங்க மத்திய கல்வி அமைச்சகம் ஃபோஸி ( Fossee ) என்ற புதிய திட்டத்தைத் தொடங் கியுள்ளது .


இந்த திட்டத்தின் கீழ் , டி டபிள்யூ எஸ் ஐ எம் ( DWSIM ) , இ – சிம் ( eSim ) , பைத்தான் ( Python ) , சைலேப் ( Scilab ) , ஆஸ்டேக் ( Ost ag ) , OpenFOAM, ஓபன்மோடுலிகா ( OpenModelica ) , ஒபன்பிஎல்சி ( OpenPLC ) , எஸ்பி எச்எஸ் , ஆர் , க்யூஜிஎல்எஸ் , போக் கல் ( Focal ) உள்ளிட்ட அதி நவீன கணினி மொழி மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பாடங்களுக்கு மும்பை ஐஐடிசார்பாக 8 வாரகால பயிற்சி வழங்கப்படுகிறது .

 

இந்தப் பயிற்சிக்கு இளநிலை , முதுநிலை மற்றும் பிஎச்டி என அனைத்து தரப்பு உயர்கல்வி மாணவர்களும் மே 5 – ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .

 

இதுதொடர்பான கூடுதல் விவ ரங்களை https://fossee.in என்ற இணைய தளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .