வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ , இல்லையோ சர்க்கரை , அனீமியா , ஆஸ் துமா , கொலஸ்ட்ரால் , மலச்சிக்கல் , புற்றுநோய் , நீரிழிவு . வயிற்றுப் புண் , பார்வைக் குறைபாடு என சகல நோய்க ளையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி வெண்டைக்காய் என்பதில் சந்தேகம் வேண்டாம் .

 

வெண்டைக்காயில் , புரதம் , நார்ச்சத்து , கொழுப்பு , கால்சியம் , இரும்புச்சத்து , மெக்னீசி யம் , பாஸ்பரஸ் , பொட்டாசியம் , சோடியம் , வைட்டமின் சி , வைட்டமின் பி 1 , வைட்ட மின் பி 2 , வைட்டமின் பி -6 , வைட்டமின் பி 9 என ஏராளமான சத்துகள் உள்ளன .

 

கர்ப்பிணிப் பெண் களுக்கு மிகவும் அவசி யமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறை யவே உள்ளது .

 

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழ கொழப்புத் தன்மை தான் .

 

ஆனால் , அந்தக் கொழகொழப்பு பிடிக்கா மலே பலரும் அதை சேர்த் துக் கொள்வதில்லை .

 

உண் மையில் அந்த வழவழப்புத் தன் மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன .

 

இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித் தவர்களுக்கு அருமருந்து . தவிர , மலச்சிக்கல் , வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும் கூட ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் அதிகமுள்ள வெண்டைக் காயை ‘ ஹெல்த் டானிக் ‘ என்றே சொல்லலாம் .

 

இதி லுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அள வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது .

 

தவிர , இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் , புற்று நோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியையும் தவிர்க்கக் கூடியவை .

 

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி . ஆஸ்து மாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது .

 

இதில் உள்ள பொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது . ரத்தத்தில் சர்க் கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக் காய் உதவுகிறது .

 

அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து , அடிக்கடி சளி , இரு மல் வருவதும் தவிர்க்கப்படுகி றது .

எடை குறைப்பு முயற்சி யில் இருப்போருக்கு மிக வும் உகந்த காய் இது . காரணம் , இதிலுள்ள அதிகப்படியான நார்ச் சத்தும் குறைந்த ஆற் றலும் . 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே .

 

வெண்டைக்காய் சாப் பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பல ருக்கும் தெரியாது .

 

வெண்டைக் காயில் உள்ள பீட்டா கரோட் டின் , கேட்டராக்ட் மற்றும் க்ளாக் கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடி யது .

 

வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்ப தும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல் களாக இருக்கும் .

 

வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலை முடி பளபளப்பாகும் .