கரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்

 • வீட்டு சுற்றுப்புறத்தில் வேப்பிலை , மஞ்சள் கலந்த நீரை தெளிக்கலாம் .
 • தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும் .
 • கை கழுவுவதற்கு மஞ்சள் , வேப்பிலை , கற்றாழை மற்றும் படிகாரம் சேர்ந்த நீரை பயன்படுத்த வேண்டும் .
 • தொண்டை காயாமல் இருக்க வெந்நீர் அருந்தலாம் . வீட்டில் சாம்பிராணி , காய்ந்த வேப்பிலை , வெண் கடுகு , ஓமம் , பூண்டு தோல் கலந்து புகை போடலாம் .
 • வேப்பிலை , யூகலிப்டஸ் தைலம் அல்லது நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் ஆவி பிடித்தல் நலம் .
 • காலையில் தோல் சீவிய இஞ்சி , எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி பனங் கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகுவது நல்லது .
 • சூடான பாலில் மிளகு , மஞ்சள் சேர்த்து இரவில் அருந்த வேண்டும் .
 • தினமும் மாலையில் சுக்கு , கொத்துமல்லி கலந்த பானம் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருக வேண்டும் .
 • சிறு தானியங்களான கேழ்வரகு , சாமை , தினை குதிரை வாலி , வரகு ஆகியவற்றை உணவாக சமைத்து சாப்பிட வும் .
 • கசப்பு சுவையுள்ள சுண்டைக்காய் , பாகற்காய் , வேப் பம்பூ ரசம் , தூதுவளை ரசம் செய்து சாப்பிடலாம் .
 • நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க நெல்லிக் காய் , கொய்யாப்பழம் , பப்பாளி , ஆரஞ்சு , சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி கலந்த பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும் .
 • எல்லோருமே தினமும் ஒரு ஐந்து நிமிடம் வேப்பிலை , மஞ்சள் , உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித் தால் மூக்கு , தொண்டையில் உள்ள கரோனா வைரஸ் கிருமி அழிந்துவிடும் .
 • பயறு வகைகளான ஜிங்க் சத்துள்ள நிலக்கடலை , பாதாம் பருப்பு , முந்திரி , கொண்டைக்கடலை போன்றவற்றை சுண்டலாக மாலையில் சாப்பிடலாம் .
 • தினமும் காலை 10 மணிக்குள்ளும் மாலை 4 மணிக்கு பிறகும் பதினைந்து நிமிடம் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும் .
 • நெல்லியில் விட்டமின் ‘ சி ‘ சத்து அதிகம் உண்டு . கபசுரக் குடிநீர் , நிலவேம்புக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
 • மூலிகை தேநீர் பொடியில் துளசி , இலவங்கப்பட்டை , சுக்கு , மிளகு கொண்டு பொடி செய்து தயாரித்து தேநீர் பொடியுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி க்கலாம் .
 • மூலிகை தேநீர் பொடியில் துளசி , இலவங்கப்பட்டை , சுக்கு , மிளகு கொண்டு பொடி செய்து தயாரித்து தேநீர் பொடியுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம் .
 • மிளகு ரசம் , தூதுவளை ரசம் , எலுமிச்சை ரசம் , இஞ்சி ரசம் சாப்பிட நோய் எதிர்ப்பு உருவாகும் .
 • மணத்தக்காளி , முருங்கை கீரை , பொன்னாங்கண்ணி கீரை , அரைக்கீரை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நலம் .
 • துதுவளை தோசை , கோதுமை ரவை உப்புமா , கோதுமை கிச்சடி , மாப்பிள்ளை சம்பா அரிசி இட்லி சாப்பிட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் .
தமிழ்நாடு சித்த மருத்துவத்துறை வெளியிட்ட தகவல்